பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
டி. ராஜேந்தர் கனவில் அல்லாஹ் வந்தான். த.த.ஜ. மேடையில்; நடந்த கூத்து.
டி. ராஜேந்தர் கனவில் அல்லாஹ் வந்தான். த.த.ஜ. மேடையில்; நடந்த கூத்து.
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. டான் மியூசிக் டி.வி.யில் பி.ஜே. நிகழ்ச்சிக்கு தடை போட்டது யார்? என்ற தலைப்பில்தான் இந்த இதழை வெளியிட இருந்தோம். அதைவிட அதிர்ச்சியான நிகழ்ச்சி இன்று நடந்துள்ளதால் தலைப்பை மாற்றி விட்டோம். எனவே இரு தலைப்புகளுடன் இந்த இதழை பார்வையிடவும். டான் மியூசிக் டி.வி.யில் தினமும் யு.ஏ.இ. நேரம் இரவு 7 மணி முதல் ஒரு மணி நேரம் பி.ஜே. நிகழ்ச்சி ஒளி பரப்பாகி வந்தது. அது இப்பொழுது தடை செய்யட்பட்டுள்ளது. தடைக்குக் காரணம் த.மு.மு.க. தான். நாங்கள் கொடுத்த காசைவிட கூடுதலாகக் கொடுத்து எங்கள் நேரத்தை வாங்கி விட்டார்கள். என்ன இருந்தாலும் நாங்கள் செய்தது மார்க்கப் பிரச்சாரம்தானே. இஸ்லாமியப் பிரச்சாரத்தை த.மு.மு.க.வினர் தடை செய்து விட்டார்களே! என்று பிரச்சாரம் செய்து த.த.ஜ.வினர் அனுதாபம் தேடி வருகிறார்கள். ஷஷஉண்மை அது கசப்பாயினும் சொல்லி விடுங்கள் என்று இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள். த.த.ஜ.வினரோ இது பற்றிய உண்மையைக் கூறாமல் ஹதீஸுக்கு முரணாக பொய்களைக் கூறி வருகிறார்கள். அதன் மூலம் சமுதாயத்தை ஏமாற்றி அனுதாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே உண்மை நிலை என்ன என்பதை அறியத் தர உள்ளோம்.
வசூல் வேட்டையாடுவது அவர்களது குலத் தொழில்.
டான் மியூசிக் டி.வி.யில் ஆரம்பத்தில் இலவசமாகவே த.த.ஜ.வின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இலவசமாகவே ஒளிபரப்பப்பட்ட போதும் அந்த நிகழ்ச்சியைக் காட்டி வசூல் ராஜாக்கள் வசூல் வேட்டையாடினார்கள். வசூல் வேட்டையாடுவது அவர்களது குலத் தொழில். எனவே அதை விட்டு விடுவோம். இப்பொழுது தடையானதற்கு உண்மைக் காரணம் என்ன என்பதை மட்டும் பார்ப்போம். முன்பு, இந்து மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வித்தியாசம் சாராயக் கடைக்கும் டீக்கடைக்கும் உள்ள வித்தியாசம் என்று பேசி விஜய் டி.வி.யில் பிரச்சனை ஆனது அல்லவா. அது போல்தான் இதுவும்.
இதுதான் உண்மை.
...அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்!.. என்று அல்குர்ஆன் 6:108ல் அல்லாஹ் கட்டளை இட்டுள்ளான். தனது தர்ஜுமாவில் அல்லாஹ்வின் வார்த்தைகளையே ஆயிரக்கணக்கில் நீக்கி விட்ட துணிச்சல்காரர் அல்லவா பி.ஜே. அந்த பி.ஜே. அல்லாஹ்வின் இந்தக் கட்டளையையும் மீறி விட்டார். பிற மதத்தவர்கள் கடவுள்களாக நம்பியுள்ளவற்றை இழிவு படுத்திப் பேசினார். அதனால் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பலமான எதிர்ப்புக்கள் கூடிக் கொண்டே போனது. எனவே டான் மியூசிக் டி.வி. உரிமையாளர் குகநாதன் பி.ஜே. நிகழ்ச்சியை தடை செய்து விட்டார். ஏற்கனவே த.மு.மு.க.வின் நிகழ்ச்சி டான் மியூசிக் டி.வி.யில் ஒளிபரப்பப்பட ஒப்பந்தம் ஆகி இருந்தது. பி.ஜே. நிகழ்ச்சி தடை செய்யப்பட்டு விட்டதால் யு.ஏ.இ. நேரம் இரவு 7-30மணி முதல் 8மணி வரை டான் மியூசிக் நிர்வாகம் த.மு.மு.க.வுக்கு ஒதுக்கியுள்ளது. இதுதான் உண்மை. எனவே இஸ்லாமியப் பிரச்சாரத்தை த.மு.மு.க.வினர் தடை செய்து விட்டார்கள் என்று த.த.ஜ.வினர் கூறுவது தார்ப்பாயில் வடிகட்டியப் பொய்யே.
இதுதான் பி.ஜே.யிஸம்.
உண்மையிலேயே இஸ்லாமியப் பிரச்சாரத்தையும் சமுதாய நல நிகழ்ச்சிகளையும் தடை செய்தவர்கள் த.த.ஜ.வினர்தான். தாங்கள் செய்த தவறு வெளி வராமல் இருக்கவும், வெளி வந்து விட்டால் அது எடுபடாமல் போகவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டை எதிர் தரப்பு மீது கூறி விட வேண்டும். இதுதான் பி.ஜே.யிஸம். விண் டி.வி.யில் த.மு.மு.க. இஸ்லாமிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. அதை பி.ஜே. தடை செய்து விட்டார். இதை மறைக்கத்தான் பி.ஜே.யிஸப்படி த.மு.மு.க.மீது பொய்யை பரப்புகிறார்கள். த.மு.மு.க. சார்பான இஸ்லாமிய நிகழ்ச்சிகளை தடை செய்து விட்ட த.த.ஜ.வின் விண் டி.வி.யில் முக்கடவுள் கொள்கை உடைய கிறிஸ்தவ மதப் பிரச்சார நிகழ்ச்சி நடந்து கொண்டுதானிருக்கிறது. பல கடவுள்கள் கொள்கை உடைய இந்து மதப் பிரச்சாரம் நடந்து கொண்டுதானிருக்கிறது. த.த.ஜ.வினரால் ஷpர்க்கர்கள் என்றழைக்கப்படுபவர்களின் பிரச்சாரங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நிறுத்தாத கொள்கைப் புலி பி.ஜே. த.மு.மு.க.வின் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை தடை செய்தது சரியா என்று கேட்டால் அவையெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் உள்ளவை என்கிறார்.
பி.ஜே. தடை செய்த த.மு.மு.க. நிகழ்ச்சியில் சினிமாவா காட்டினார்கள்.
த.மு.மு.க. நிகழ்ச்சியை ஒப்பந்தம் இல்லாமலா இதுவரை விண் டி.வி.யில் ஒளி பரப்பி வந்தார்கள். நாம் விசாரித்த வரையில் பி.ஜே. தடை செய்த அன்று கூட த.மு.மு.க.வின் பணம்தான் விண் டி.வி.யில் இருந்துள்ளது. விண் டி.வியில் இருப்பாக உள்ள த.மு.மு.க. ரூபாய் 75 ஆயிரம் என்றும் ஒளி பரப்புவதற்காக வாங்கப்பட்ட கேஸட்டைதான் பி.ஜே. உத்தரவுப்படி திருப்பி அனுப்பப்பட்டது என்றும் தான் விண் டி.வி. ஊழியர்கள் கூறுகிறார்கள். பி.ஜே. தடை செய்த த.மு.மு.க. நிகழ்ச்சியில் சினிமாவா காட்டினார்கள். சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார நிகழ்ச்சிகளைத்தான் காட்டினார்கள். இஸ்லாமிய நிகழ்ச்சிகளை தடை செய்து விட்ட பி.ஜே.தான் பிற மதப் பிரச்சாரங்களை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருவதாகக் கூறுகிறார். இது உண்மையானால் சினிமா கூத்துக்களை உடனே நிறுத்த வேண்டியதுதானே. சினிமா பாடல்களுக்கும் இராக் கூத்துக்களுக்கும் இவர்தானே பணம் கொடுக்க வேண்டும். அவற்றை ஏன் நிறுத்தவில்லை.
எந்த நிமிடத்திலும் பாக்கரை சுனாமி அடித்து விடலாம்.
வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள் என்று சினிமாப் பற்றி எழுதிய கொள்கைப் பூலியின் கைகள் என்ன செய்து கொண்டிருக்கிறதோ? விண் டி.வி. வெளிச்சத்தில் அவரது வெட்க உணர்வுகள் வேகவில்லை என்பதை அனுபவப் பூர்வமாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாரோ. இரவு 11 மணிக்கு மேல் ரகசியமாகப் பார்;த்ததை த.த.ஜ.வின் தயவில் பட்டப் பகலில் பார்க்கலாம் என்ற அக மகிழ்வுடன் இருக்கிறாரோ ஆஹா இவர்களல்லவா கொள்கைவாதிகள். விண்.டி.வி. பொறுப்பாளர் பாக்கர் என்பது டம்மிதான், பினாமிதான். எந்த நிமிடத்திலும் பாக்கரை சுனாமி அடித்து விடலாம். விண்.டி.வியின் ஓரிஜினல் சீப் எக்ஸ்கியூட்டிவ் ஆபிஸர் பீ.ஜே.தான். இப்பொழுது விண் டி.வி.யில் வரும்; பலானது பலானது மேலே விவகாரமெல்லாம் பி.ஜே.யின் விருப்பத்தின் மேலேதான் ஒளிபரப்பாகிறது.
கவுண்டமணியுடன் இணைந்து அண்ணன் பி.ஜே. வழங்கும்.
த.மு.மு.க.வின் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை தடை செய்து சினிமாப் பாடல்களையும் கவுண்டமணியின் காமெடி நிகழ்ச்சிகளையும் ஒளிபரபப்புவதுதான் பி.ஜே.யின் கொள்கை போலும். காலப் போக்கில்; செந்திலுக்குப் பதிலாக செந்தில் இடத்தில் பி.ஜே. இடம் பெற்று. கவுண்டமணியுடன் இணைந்து அண்ணன் பி.ஜே. வழங்கும் என்று விளம்பரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதை 10-06-2005தேதிய இன்றைய வெள்ளி மேடை நிரூபித்துள்ளது. அதுதான் அண்ணன் அன்றே சொன்னாரே கொள்கைப் பிரச்சனையால் விலகுகிறேன் என்று. அவரது கொள்கை என்ன என்பது அவரது ரசிகர்களுக்கு அன்றே புரிந்தது நமக்கு இன்றைய 10-06-2005 தேதிய வெள்ளி மேடைதான் புரிய வைத்துள்ளது.
பி.ஜே.யின் ஜும்ஆ மேடையில் - மிம்பரில் டி.ராஜேந்தர்.
10-06-2005 தேதிய வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுது முடித்ததும் சுன்னத்தான தொழுகைகளை தொழ விடாமலும் தஸ்பீஹ் செய்ய விடாமலும் அவசர அவரமான அறிவிப்பை செய்து பரபரப்பு ஏற்படுத்தினார் பாக்கர். சினிமா டைரக்கடர் டி. ராஜேந்தருக்கு பி.ஜே.யின் தர்ஜுமாவை சில நாட்களுக்கு முன்பு கொடுத்தேன் அதில் அவர் 13 ஜுஸ்வுகள் வரை படித்து விட்டார். அதைப் படித்ததினால் அவர் ஓரிறைக் கொள்கையில் உறுதியாகி விட்டார். எனவே அவர் முஸ்லிம் ஆகி விட்டார். அவர் நம் பள்ளிவாசலுக்கு வர விரும்பினார். அனுமதிப்பீர்களா என்று கேட்டார். வாருங்கள் என்றேன். வந்திருக்கிறார். இதோ உங்கள் முன் சினிமா படத் தயாரிப்பாளர், டைரக்கடர், நடிகர், பாடகர், இசை அமைப்பானர் டி. ராஜேந்தர் என்று பி.ஜே.யின் பினாமி பாக்கர் அவருக்கே உரிய பாணியில் அறிமுகப்படுத்தினார்.
முஸ்லிம்களெல்லாம் அறுவெறுத்துப் போய் வேகமாக வெளியேறினார்கள்.
ஜும்ஆ மேடையான மிம்பரில் ஏறிய த.த.ஜவின் தவ்ஹீதுவாதி டி. ராஜேந்தர் தான் புதிதாக வெளியிட இருக்கும் புதிய பாடலைப் பாடினார். தன் விரல்களால் சுண்டி சுண்டி இசைத்த வண்ணம் பாடினார். அதிகாலை நேரம் சுபுஹுக்குப் பின்னே போன்ற நாகூர் ஹனீபா பாடிய பாடல்களையும் பாடினார். இஸ்லாமிய உணர்வு உள்ள முஸ்லிம்களெல்லாம் அறுவெறுத்துப் போய் வேகமாக வெளியேறினார்கள். பி.ஜே, பாக்கர் போன்ற த.த.ஜ. தலைமையினரும் பி.ஜே. ரசிகர்களும் டி. ராஜேந்தரை ரசித்துப் பார்த்த வண்ணம் அவரது பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாகூர் ஹனீபாவின் பாடல்களில் எந்தப் பாடல்களை குப்பை, கட்டுக்கதை, இட்டுக் கட்டப்பட்டது, நரகில் கொண்டு சேர்க்கக் கூடியது என்று ஏகத்துவத்தில் எழுதினார்களோ அதைத்தான் டி. ராஜேந்தர் ஜும்ஆ மேடையில் - மிம்பரில் பாடினார். தன்னை சினிமா உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது முஸ்லிம் சமுதாயம்தான் என்றும் புகழாரம்? சூட்டினார்.
தர்ஜுமா விற்பனை நின்று விட்டதுடன் திரும்ப வரவும் ஆரம்பித்து விட்டது.
இறுதியில் ஷஷஅல்லாஹ்தான் என் கனவில் வந்து ஒரு தலை ராகம் படம் எடுக்கச் சொன்னான் என்று சொல்லி உள்ளார். ஒழுக்கமுடையவர்களையும் நன்னடத்தையுடையவர்களையும்தான் நமது மேடைகளில் பேச அனுமதிப்போம் என்று ஏகத்துவத்தில் எழுதியதற்கு இதுதான் விளக்கமோ? தவறான கருத்துக்களைச் சொன்னால் அந்த மேடையிலேயே தாட்சயமின்றி திருத்துவோம் என்றவர்கள் சின்னச் சின்ன விஷயங்களுக் கெல்லாம் வானுக்கும் பூமிக்குமாக குதித்தவர்கள் வாயில் கொழுக்கட்டையா வைத்துள்ளார்கள். இவர்களை இப்படியே விட்டால் அடுத்து நக்மாவை மிம்பரில் ஏற்றி விடுவார்கள் என்று தொழ வந்தவர்களில் மனம் நொந்து போனவர்கள் பேசிக் கொண்டே போனார்கள். அதில் ஒரு த.த.ஜ.காரர் ஷஷபி.ஜே. த.மு.மு.க.விலிருந்து விலகியதும் தர்ஜுமா விற்பனையில் சரிவு ஏற்பட்டது. பி.ஜே. தர்ஜுமாவில் பல்லாயிரம் வார்த்தைகள் இல்லை என்றதும் விற்பனை நின்று விட்டதுடன் திரும்ப வரவும் ஆரம்பித்து விட்டது. எனவே அதைச் சரி கட்டத்தான் பி.ஜே. தர்ஜுமாவை படித்த டி.ஆர்; என்ற டி.வி. விளம்பரத்திற்காக இந்த விளம்பர நாடகம் நடத்தப்பட்டது. அது இப்படி ஊத்திக் கொண்டு போய் விட்டதே என்றார்.
ஷஷஉண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிந்தே தீரும்(அல்குர்ஆன் 17:81)
வெளியீடு: கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி
1 Comment:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
டி. ராஜேந்தர் குமுதம் ரிப்போட்டரில் 'நான் முஸ்லீமாகிவிட்டதாக நினைக்க வேண்டாம், எனது மனைவி கிருஸ்தவர், நான் அதே பகுதியிலுள்ள காலியம்மன் கோயிலுக்கு போய்வருவேன், அந்தோனியர் கோயிலுக்கும் போவேன் இப்போது தொழுகைக்கும் (த.த.ஜ பள்ளிக்கு) போனேன் அவ்வளவுதான் எனக்கு எம்மதமும் சம்மதம்தான்' என்று கூறியுள்ளார்.
அதே பத்திரிக்கையில் த.த.ஜ பொதுச் செயலாளர், எங்கள் தலைவரும் டி.ஆரும் நீண்ட நாள் நண்பர்கள் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது அவர்கள் வசமுள்ள வாரப்பத்திரிக்கையில், இருவாரங்களுக்கு முன் டி.ராஜேந்தரிடம் திருக்குர் தமிழாக்கத்தை பரிசளித்ததாகவும் பின்னர் மொழிபெயர்த்தவரை சந்திக்க முடியுமா? என்று தொலை பேசியில் டி.ராஜேந்தர் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
நீண்ட நாள் நண்பர் என்றால் அந்த நீண்ட நாள் என்பது குறைந்த பட்சம் ஆண்டுகளாவது இருக்கவேண்டும். ஆனால் இரண்டு வாரத்துக்கு முன் குர்-ஆன் கொடுத்து அதே இரண்டு வாரத்துக்குள் குர்-ஆன் மொழிபெயர்ப்பாளரை சந்திக்க முடியுமா? என்று டி. ராஜேந்தர் கேட்டு அதே இரண்டு வாரத்திற்குள் மொழிபெயர்ப்பாளரும் டி.ராஜேந்தரும் சந்தித்துள்ளனர்.
இரு வேறு பத்திரிக்கைகளில் இரண்டு நாக்குடன் பேசும் தைரியம் திடீர் கோடிஸ்வரர்களுக்கு மட்டுமே சாத்தியம்;. தங்கள் வியாபாரத்தை நடத்த எப்படி எல்லாம் வழிகெட்டுப் போகிறார்கள் என்பதை நினைத்து ஏகத்துவ வாதிகளுக்கு வருத்தமாக உள்ளது.
அபு அப்துல்லாஹ், சென்னை 21
Post a Comment