திருவிழாத் திருடர்கள் - இளையவன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சமுதாயச் சொந்தங்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
திருவிழாத் திருடர்கள்!

திருவிழாத் திருடர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்!



திருவிழாக்களில் திருடும் திருடன், தன்னை காப்பாற்றிக் கொள்ள திருடன்! திருடன்!! என்று கத்திக் கொண்டு ஓடுவான். அவனைத் தொடர்ந்து அவனது சகாக்களும் திருடன்..!?. திருடன்...!!??. என்று சப்தமிட்டுக் கொண்டு ஓடுவார்கள். கடைசியில் ஒரிஜினல் திருடன் தப்பிவிடுவான்! அவ்வாறு தமிழகத்தில் ஒரு கொள்ளைக் கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அடுத்தவர்களை திருடன் திருடன் என்று கூறிவருகிறது.

தவ்ஹீதின் பெயரைச் சொல்லி தன் சுயநலனுக்காக முஸ்லிம் சமுதாயத்தை கூறு போட்டு சிறுமைப் படுத்திய புண்ணியவான் பி. ஜெய்னுல் ஆபிதீன், தான் ஆக்கிரமித்து வைத்துள்ள பத்திரிக்கையிலும், தன் ரசிகர்கள் மூலமும் திருடன் திருடன் என்ற பொய் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார்;. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லும் போது அது மெய்யாக தோன்றுவது போல் ஒரு மாயையை உருவாக்க முயல்கிறார்.

திருவிழாக் கூட்டத் திருடர்களின் வித்தையைப் பாருங்கள்!

தற்போது, தான் உருவாக்கிய த.த.ஜ வில் தலைவராக இருக்கும் பி. ஜெய்னுல் ஆபிதீன் உண்மையிலேயே அல்லாஹ்வுக்கு அஞ்சி செயல்படுகிறார் என்றால், த.மு.மு.க விலிருந்து விலகிய போது தான் மட்டும் செல்லாமல் தன்னுடன் த.மு.மு.க வின் சொத்துக்களையும் சேர்த்தே அடித்துச் சென்றுள்ளார். அதை இன்று வரை உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அந்தச் சொத்துக்கள் அவருக்குத்தான் வழங்கப்பட்டது என்று அவர் பொதுமக்கள் முன்னிலையில் சத்தியம் செய்வாரா? சமுதாயத்துக்குச் சொந்தமான சொத்தை அபகரித்தவர்கள் திருடர்களா? அல்லது சொத்தை இழந்துவிட்டு அதற்கு பரிகாரமும்; தேடாமல் இன்று வரை அல்லாஹ்விற்காக பொறுமையாக இருந்து வரும் த.மு.மு.க வினர் திருடர்களா? இதில் யார் புத்திசாலித் திருடர்கள் என்று சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குப் புரியும்.

பி. ஜெய்னுல் ஆபிதீனுடைய பொறுப்பில் வெளிவந்துக் கொண்டிருக்கும் உணர்வு வார இதழ் உண்மையிலேயே அவருக்காக துவங்கப்பட்டதா? இதையும் அவர் மக்கள் மன்றத்தில் (தன்னுடைய வார்த்தை வித்தை இல்லாமல்) அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவாரா? சமுதாயத்திற்கென்று உருவாக்கப்பட்ட வார இதழை தன்னுடைய கருத்து மோதலுக்குப் பயன்படுத்தி வரும் இவர்கள் திருடர்களா? அல்லது பறிகொடுத்துவிட்டு ஏமாளிகளாக நிற்கும் த.மு.மு.க வினர் திருடர்களா? யார் திருடர்கள்? பாவம் த.மு.மு.க வினர் ஏமாளிகள்! உங்களைப் போன்று கிரிமினல் மைண்ட் இருந்தால் உங்களிடமிருக்கும் த.மு.மு.க வின் சொத்துக்கள் எப்பவோ அதன் உரியவர்களிடம் சென்றிருக்கும். மக்கள் வழங்கிய பொருளுக்கு, இறைவன் மக்களின் மூலமே தீர்ப்பளிப்பான் என்று இருந்து விட்டார்கள். தான் அபகரித்தவைகளை மறைக்க எப்படி எல்லாம் வேஷம் போடுகிறார் என்று பாருங்கள். நேற்று வரை எங்கோ இருந்த அவரது ரசிகர்கள் ஆம்! இந்த சொத்துக்கள் நாங்கள் வழங்கியது, ஆகையால் நாங்களே எடுத்துக் கொண்டோம் என்கிறார்கள். வழங்கியவர்கள் யார்? அதை விழுங்கியவர்கள் யார்? என்பதை இறைவன் நன்கு அறிவான் அதை விழுங்கியவர்களும் அறிவார்கள்!

த.மு.மு.க விடமிருந்து அபகரிப்பட்ட உணர்வு பத்திரிக்கையிலும் அவரது ரசிகர்களும் சமீபகாலமாக போடும் கூப்பாடு சுனாமி வசூலுக்கு த.மு.மு.க கணக்குக் காட்டவில்லை என்று புலம்புகிறார்கள்! முதலில் இவர்களின் வண்டவாளத்தைப் பற்றிப் பார்ப்போம். சுனாமி நிவாரணத்திற்காக எத்தனையோ தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுனாமி நிவாரண நிதி என்று கணக்கு தொடங்கி வசூலித்தார்கள். அவைகள் எல்லாம் எவ்வாறு பங்கிட்டார்கள் என்று தெரியாது! அதன் கணக்குகளை சரி பார்ப்பது அரசின் கடமை.

த.மு.மு.க சுனாமி வசூலை சரியாக வினியோகிக்க வில்லை என்று கூறும் இந்த பி. ஜெய்னுல் ஆபிதீனுடைய கொள்ளைக் கூட்டத்தினர் எந்தப் பெயரில் வசூலித்தார்கள் என்று தெரியுமா? 'தமிழ்நாடு ஜக்காத்' என்று வசூலித்தார்கள். ஏனென்றால்.... புரிந்து கொள்ளுங்கள்�����.. !?

யாராவது இவர்களைக் கேட்கப் போனால் 'நாங்க சுனாமி நிவாரண நிதி என்று வசூலிக்கவில்லையே இது எங்களின் ஜக்காத் பஃண்டுல்ல' என்று கூறுவார்கள் என்பதை நாம் சொல்லவில்லை! வெளியில் பேசிக் கொள்கிறார்கள்!!. இந்தத் தந்திரம் தான் திருவிழாத் திருட்டுத் தந்திரம் - புரிகிறதா? ஆனால் த.மு.மு.க வசூலித்த சுனாமி நிவாரண நிதிக்குப் பெயர் 'தமுமுக டிரஸ்ட் சுனாமி நிவாரண நிதி;' என்ற பெயரிலேயே வசூலித்து அதன் பெயரிலேயே அந்தக் கணக்கு வழக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. அடுத்தவர்களைப் பற்றி கூறும் முன் தன்னை சரிபார்த்துக் கொள்வது தானே சிறந்தது(?) முதலில் இந்த (அ)யோக்கிய கொள்ளைக் கூட்டம் த.மு.மு.க விடமிருந்து அபகரிக்கப்பட்ட சமுதாயத்திற்குச் சொந்தமான சொத்துக்களை திருப்பி ஒப்படைக்கட்டும்! பிறகு அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்கட்டும்!!. அடுத்தவர்களை பற்றிக் கூற இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

ரியாத் நியூ செனைய்யாவில் பி. ஜெய்னுல் ஆபிதீனுடைய உரைகள் மற்றும் நூல்கள் தடைசெய்யப்பட்டுள்ளது என்று நமது இணையத்தில் வெளியிட்டிருந்தோம். அதை நேரடியாக மறுக்காமல் நெல்லிக்குப்பம் அஹமது கபீர் என்று கற்பனைக் கதாபாத்திரத்தை (பினாமியை) உருவாக்கி அவர் ரியாத்தி;ல் வேலை செய்தது போன்றும், இப்போது நெல்லிக்குப்பத்தில் இருப்பது போன்றும் தடைசெய்யப்பட்டவைகள் எல்லாம் பொய் என்பது போன்றும் இ-மெயில்கள் மூலம் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் வௌ;வேறு கோணத்தில் கூறிவருகிறார். ரியாத்திலிருக்கும் நமது நெல்லிக்குப்பம் சகோதரர்கள் மூலம் விசாரித்ததில் 'நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த இந்தப் பெயருடைய நபர் யாரும் இல்லை' என்று நமக்கு அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது. சவுதி அரேபியாவிலிருக்கும் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் உள்ளுர் (சேவை) கூட்டமைப்பை உருவாக்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி ஒருவர் இருந்தால் எங்களுக்குத் தெரியாமல் இருக்காது என்று அடித்துச் சொல்கிறார்கள். த.த.ஜவினரின் மெயிலில் கூறிவரும் நெல்லிக்குப்பம் அஹமது கபீர் பி. ஜெய்னுல் ஆபிதீனுடைய பினாமியே!!! ரியாத் நியூ செனைய்யாவில் உள்ள தஃவா சென்டரில் பி. ஜெய்னுல் ஆபிதீனுடைய உரைகள், நூல்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை!. ஒரு உண்மையை மறைக்க நெல்லிக்குப்பம் அஹமது கபீர் என்று எத்தனை வேஷம் போடுகிறார்;. சுபஹானல்லாஹ்!!!

பி. ஜெய்னுல் ஆபிதீன் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற போது அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது உண்மை என்று நம்புபவர்கள், அவரது உரைகளும், நூல்களும் தடை செய்யப்பட்டுள்ளன என்பதையும் நம்புவார்கள்! பி. ஜெய்னுல் ஆபிதீன் வளைகுடா சென்றிருந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டார்; என்று யாராவது சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ளமாட்டீர்களோ (காரணம் அவரது அனைத்து கூட்டங்களுக்கும் அரசு தடை விதிக்கப்பட்டிருந்தது) அதே போன்று தான் இதுவும்.

இப்போது த.த.ஜ வினர் பி.ஜே.பி.யின் கோயபல்ஸின் பாலிசியை கையிலெடுத்துள்ளார்கள். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி திருவிழாத் திருடனைப் போன்று அடுத்தவனைத் திருடன் என்று சொல்வதன் மூலம் தன்னை காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறார் இந்த பி. ஜெய்னுல் ஆபிதீன் !

இப்பொழுது புரிகிறதா இவர்கள்தான் கைதேர்ந்த திருவிழாத் திருடர்கள் என்று !!!

அல்லாஹ் தான் இந்த பி. ஜெ. ரசிகர் மன்றத்தினரைக் காப்பற்ற வேண்டும்.


அன்புடன் 'இளையவன்'

0 Comments: