அல்லாஹ்வின் திருப்பெயரால்...
நன்றி : அல் - ஜன்னத் மாத இதழ் செப்டம்பர் 2005
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் முன்னிலையில் அரை நிர்வாணமா?
நன்றி : அல் - ஜன்னத் மாத இதழ் செப்டம்பர் 2005
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் முன்னிலையில் அரை நிர்வாணமா?
அல்லாஹ்வைத் தொழுவதுதற்கதக நாம் நிற்கும் போது அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கின்றோம் அன்ற உணர்வோடு நிற்கவேண்டும் 'தொழுகையில் உள்ளச்சத்தோடு நிற்கக் கூடியவர்களே வெற்றி பெற்றவர்களாவர்' திருக்குர் ஆன்(23:1-2) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.
ஓர் அடியான் அல்லாஹ்வைத் தொழும் போது அவனைப் பார்ப்பது போன்ற உணர்ர்வாடு தொழ வேண்டும், அல்லாஹ்வைப் பார்க்க முடியாவிட்டாலும் அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வோடு அல்லாஹ்வைத் தொழ வேண்டும். தொழும் போது இந்த நலையி;ல் இருக்க வேண்டும் என்பதுதான் நபி(ஸல்) அவர்களின் கட்டளையாகும் நூல்: (புகாரி)
பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் தொழுவதற்காகச் செல்லும் போது அழகாக கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை.
'ஆதமுடைய மக்களே! ஓவ்வொரு பள்ளிவாசலிலும் தொழும் போது உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள், உண்ணுங்கள், பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்' திருக்குர்ஆன் (7:31)
'நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்கனைச் செய்ய கட்டளையிடமாட்டான். நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?' திருக்குர்ஆன்(7:28)
இந்த வசனங்கள் மூலம் ஒரு மனிதன் தனது மானத்தை மறைப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மனிதர்கள் மானம் கேடானது என்று வெறுக்கக் கூடியவற்றை அல்லாஹ்வும் வெறுக்கின்றான் என்பதையும் புரிய முடிகிறது.
கோவணம் கட்டித் தொழுவது, ஜட்டி, அரைக்கால் சட்டை யெல்லாம் போட்டுக் கோண்டு மற்ற மனிதர்களின் முன்னே நிற்பதையே மானக் கேடானதாகக்கருதும் போது படைத்த அல்லாஹ் வின் முன் இப்படி நிற்பதை அல்லாஹ் விரும்புவானா என்பதை ஒவ்வொரு அறிவுடையவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி முக்கால் நிரிவாணமாக பள்ளிவாசலுக்குச் செல்வது அலங்காரமாகுமா? ஆலங்கோலமாகுமா? இப்படி ஆடை அணிந்து தொழுவது அல்லாஹ்வை அவமரியாதை செய்வதாக, அவனைக் கேவலப்படுத்துவதாக அவனுடைய கட்டளைக்கு மாறு செய்வதாக ஆகாதா?
ஓருவன் தனது மேனியில் எந்க ஆடையுமில்லாமல் கோவணம் மட்டும் அணிந்து அல்லது ஜட்டி அணிந்து வீதியில் சென்றால் அவனைப் பார்த்து பைத்தியக்காரன் என்று தானே சாதாரண வழக்கத்தில் உள்ளது? எனவே எல்லோரையும பைத்தியக்காரர்களாக்கும் திட்டம் தான் ஜட்டி மட்டும் அணிந்து தொழலாம் என்று ஃபத்வா கொடுப்பது.
நபிகள்(ஸல்) அவர்கள் அரைக்கால் சட்டை அணிந்து முக்கால் தொடையும் தெரிவது மாதிரி தொழுதார்கள் அல்லது தொழுகை நடத்தினார்கள் என்பதற்கு ஒரு சான்றையாவது கொண்டுவர முடியுமா? ஆப்படிக் கொண்டு வந்தால் அதை மக்கள் பின் பற்ற தயாராக உள்ளார்கள் அது மட்டுமல்ல அதற்குரிய ஆதாரத்தைக் கொண்டு வரக் கூடியவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கத் தயராக உள்ளனர். ஆதாரத்தைக் கொண்டு வரவில்லையென்றால் அது போன்ற கேவலமான கருத்துக்கனைக் கூறி நபியையும் அவர்களுடைய மார்க்கத்தையும் இழிவுபடுத்தியதற்காகத் தக்க தண்டனை கொடு;க்கவும் தயங்கமாட்டார்கள்.
நாங்கள் தான் நபியை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் எனிறு சொல்லிக் கொள்ளக் கூடியவர்களின் தலைவரால் அறிமுகம் செய்யப்பட்ட, அரைக்கால் அணிந்து தொழலாம் என்பதற்கு எந்த ஒரு சான்றும் நபியின் மூலம் அறிவிக்கப்படாத நிலையில், ஸஹாபாக்களைப் பின் பற்றிட வேண்டும் என சொல்லக் கூடியவர்கள் யார்? என்பதை இப்போது அவரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.
தொடை மறைக்க வேண்டிய உறுப்பு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்கள்: (புகாரீ, அஹ்மது, இப்னுமாஜா, திர்மிதி)
அரைக்கால் சட்டை ஆதரவாளர்கள் தங்களுடைய கருத்திற்கு சான்றாகக் கூறும் ஹரீஸ்கள் எதிலுமே அவர்கள் கூற்றிற்கு எந்த ஆதாரமுமில்லை.
முஸ்லிம் தொகுப்பின் ஹதீஸ் எண் 4414ல் வந்துள்ள தகவல் பின் வருமாறு ஆயிஷh(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என்னுடைய விட்டில் நபி(ஸல்) அவர்கள் தனது தொடைகள் அல்லது கெண்டைக் கால்கள் திறந்த நிலையில் படுத்திருந்தார்கள், அபூபக்கர்(ரலி உள்ளே வர அனுமதி கேட்ட போது அவர்கள் அந்த நிலையிலேயே அனுமதிக்கிறார்கள். பின்னர் உமரி (ரலி) அனுமதி கேட்கிறார்கள். அந்த நிலையில் இருந்தே அனுமதி வழங்கினார்கள். பின்னர் உதுமான் (ரலி) அனுமதி கேட்டார்கள், உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து அமர்ந்து தனது ஆடைகளை சரிசெய்து கொண்டு அவருக்கு அனுமதியளித்தார்கள்.
இதைக் கண்ட நான் அபூபக்கர் வந்தார் அவருக்காக உங்கள் முகம் மலரவில்லை, அவரை கண்டு கொள்ளவில்லை, பின்னர் உமர் வந்தார், உங்கள் முகம் மலரவில்லை, அவரையும் கண்டு கொள்ளவிலிலை, பின்னர் உதுமான் வந்த போது எழுந்து ஆடையை சரி செய்தது ஏன்? என்று கேட்டேன் அதற்கு யாரைப் பார்த்து வானவர்கள் வெட்கப் படுவார்களோ அவரைப் பார்த்து நான் வெட்கப்பட கூடாதா? என்று நபி(ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸை நன்றாகக் கவனியுங்கள்.
1. இந்த சம்பவம் தொழுகையில் நடந்ததல்ல.
2. நபி(ஸல்) அவர்கள் தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது நடந்தது. ஆதுவும் படுக்கையில் இருக்கும் போது நடந்த சம்பவம்.
3. அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) யைப் பொருத்தவரையில் தனக்கு ஆதிகால நண்பர்கள் என்பதால் கண்டு கொள்ளாமலிருந்தார்கள்.
4. உதுமான்(ரலி) வந்தபோது எழுந்து அமர்ந்து தனது ஆடையை சரிசெய்து மரியாதை செய்கிறார்கள் என்ற காரணத்தினால், தொடையை மறைக்க வேண்டிய வெட்க உளுப்புகளில் ஒன்று என்று இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகிறது.
தொடையை மரைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாகத் தான் இந்த ஹதீஸ் உள்ளதே தவிர திறக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமில்லை.
புகாரி 271-வது ஹதீஸாகவும், முஸ்லிமில் 2561-வது ஹதீஸாகவும் வந்துள்ளதில் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பிரயாணம் செய்யும் போது ஆடை நீங்கி தொடை தெரிந்தது என்று அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதிஸை நன்றாகக் கவனிப்போமானால் இதுவும் தொழுகை சம்பந்தமானதல்ல. மேலும் வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது நிகழ்ந்துள்ளது, பிரயாணத்தில் காற்று அதிகமாக வீசி ஆடை சிறிது நீங்கியிருக்கலாம் அவை அசாதாரணமானது இதை எப்போதும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகவோ அல்லது தொழுகையில் அரைக்கால் சட்டை அணிந்து தொழலாம் என்பதற்கு ஆதாரமாகவோ எடுத்துக் கொள்ள முடியாது.
அடுத்து புகாரியில் இடம் பெறும் 395-வது ஹதீஸையும் அரைக்கால் சட்டை அணிவதற்கு ஆதாரமாக எடுத்துக் கூறுகின்றனர்.
இந்த ஹதீஸைப் பார்க்கும் போது இதுவும் தொழுகைப்பற்றியது கிடையாது, மேலும் தண்ணீர் உள்ள இடத்தில் நபி(ஸல்) அவர்கள்; முட்டுக் காலுக்கு மேல் உயர்த்தியுள்ளார்கள் என்று வந்துள்ளது. தண்ணீர் தனது ஆடையில் பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த நேரத்தில் அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள்.
தொழுகையில் அரைக் கால் சட்டை அணிந்து தொழலாம் என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஆசாதாரணமான நேரத்தில் நடக்கின்ற விஷயங்களையெல்லாம் சாதாரணமாக ஆதாரமாக எடுத்துக் கூறுவது எந்த வகையிலும் சரியாதல்ல.
இப்னுமாஜாவில் இடம் பெறும் 793-வது ஹதீஸ், அப்துல்லாஹ் பின் அம்ர் அறிவிக்கின்ற செய்தியில் நபி(ஸல்) அவர்கள் மூச்சிரைக்க வேகமாக வருகிறார்கள் அபிபோது அவர்கள் தனது ஆடையை முட்டுக் காலுக்கு மேலே தூக்கிக் கொண்டு வந்ததாக உள்ளது. வேகமாக வரும் போது கால் தட்டிவிடக் கூடாது என்பதற்காக அவ்வாறு அந்த நேரத்தில் செய்திருப்பார்கள் என்றுதான் சம்பவம் தெரிவிக்கிறது இதை ஆதாரமாகக் கொண்டு எல்லா நேரத்திலும் திறந்திருக்கலாம் என்றோ அல்லது தொழுகையில் அரைக்கால் சட்டை அணிந்து தொழலாம் என்றோ கூறுவதற்கு இதில் எந்த ஆதாரமுமில்லை.
மேலும் புஹாரியில் உள்ள ஹதீஸ் 365-ல் இந்த ஹதீஸையும் அரைக்கால் டவுசர்கள் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
ஆக தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் அரைக்கால் டவுசர் அணிந்து தொழுதார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது. அல்லஹ்வின் முன் கண்ணியமான ஆடைகளை அணிந்து உள்ளச்சத்தோடு தொழுது கொண்டிருக்கும் மக்களிடையில் தேவையற்ற வீண் பிரச்சனைகளை சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள் தங்கள் பக்கம் மக்கள் கவனம் திரும்ப வேண்டு மென்பதற்காக இப்படிப் பட்ட சட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றார்கள் மக்கள் தான் எச்சரிக்ககையாக இருக்க வேண்டும்.
நன்றி : அல் - ஜன்னத் மாத இதழ் செப்டம்பர் 2005
0 Comments:
Post a Comment