சுதந்திர திருநாள சிந்தனை - இஸ்லாமிய இணையப் பேரவை (IIP)

முதல் சிப்பாய் கலகம் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் ஆக்ரோசத்துடன் ஆங்கிலேயருடன் யுத்தமிடும் இஸ்லாமியர்கள்

அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?

கடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் 'பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது?' என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம்.


குருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்.

தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம்.

அநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.

முதல் சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முஸ்லிம் இந்தியர்கள் ஆங்கிலேய பீரங்கியில் குற்றுயிராக கட்டப்பட்டு

ஆனால் குருமூர்த்தி ஐயர் போன்றவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதிகளை மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி செய்தி பரப்புவதால், சங்பரிவார பார்ப்பனர்களின் பயங்கரவாத செயல்களை குறிப்பிடும்போது இந்துத் தீவிரவாதி என்று அடையாளப்படுத்துமளவிற்கு நடுநிலையாளர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.
பெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

//பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். - - குருமூர்த்தி//

முதல் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிடும் திப்புவின் வீரர்கள்

என்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.

குருமூர்த்தி ஐயரின் அகழ்வாராய்ச்சியும் உண்மை விளக்கமும்.

மேலும் படிக்க.......

இஸ்லாமிய இணையப் பேரவை

ISLAMIYA INAYAP PERAVAI

0 Comments: