இஸ்லாம்கல்வி முஃப்தியின் பித்தளாட்டங்கள் (ISLAM KALVI)

குறிப்பு : தமிழ் முஸ்லிம் அரசியல் மேடையில் உள்ள ததஜ வினரை பற்றிய அசிங்கமான செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் அணைத்தையும் எழுதச் சொன்னது இஸ்லாம் கல்வி ஓனர் முஃப்தி பிரச்சினை என்றவுடன் அதை வைத்து எம்மை அசிங்கப்படுத்த முயல்கின்றார். முஃப்தி என்ற இந்த நாடகதாரியின் அசிங்கமான மற்றொரு முகத்தை அம்பளப்படுத்தவே இந்த பதிவு
இஸ்லாம்கல்வி முஃப்தியின் பித்தளாட்டங்கள் (ISLAM KALVI)
பிரித்து மேய்வது


ஆணவம் என்பது உண்மையை மறுப்பதும் பிறரை இழிவாக என்ணுவதும் ஆகும்( நபிகள் நாயகம் (ஸல்) நூல்- புஹாரி

பூமியல் செருக்காக நடக்காதிர்கள். ஏனெனில் உம்மாள்
பூமியை பிளந்துவிட முடியாது (அல:குர்ஆன் : 17:37


இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும்தான் பார்க்கின்றான். - ஹதீஸ்




குறிப்பு : அமைதி காக்கும்படி பல நடுநிலை சகோதரர்கள் கேட:டுக்கொண்டார்கள் ஆனால் அமைதி காப்பதென்பது எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்வது போல் ஆகிவிடும் என்பதால் இங்கு எழுதுகின்றோம்.

தமிழ் முஸ்லிம் மன்றம் என்ற பெயரில் நடுநிலை நாடகமாடும் வலைப்பதிவில் இஸ்லாம்கல்வி.காம் என்ற வெப்சைட்டை நடத்தி வருபவரும் தமிழ் முஸ்லிம் மன்றத்தின் ஓனரும் அபு முகம்மத் , அபு உமர், நாட்டாமை உள்பட பல பெயர்களில் எழுதி வருபவரும் ஆன ஜித்தாவை சேர்ந்த முஃப்தி என்பவர் பிரித்து மேய்வதும் பின்னி பெடலெடுப்பதும் என்ற தலைப்பில் எம்மைப் பற்றி ஒரு கட்டுரையை பதிந்திருந்தார் அது குறித்கு விளக்கமளிப்பதற்காக இந்த பதிவு.

இவர் தனது அந்தப் பதிவில் மிகச் சாதுர்யமாக தனது எழுத்துத் திறமைகளால் மக்களை மாக்களாக்க முயற்ச்சித்திருக்கிறார். தனது எழுத்தக்களுக்கு வலிமை சேர்ப்பதற்காக "அதிரை ஜமீல் காக்கா" என்பவரை ஆதரவிற்கு அழைத்துள்ளார். முதலில் "அதிரை ஜமீல் காக்கா" எனபவர் ஒரு மறியாதைக்குறிய நபர் அவர் சவுதி அரேபிய கிழக்கு மாகானத்தில் அழைப்பு பனியில் சிறந்த முறையில் ஈடுபட்டு அதிக சகோரர்கள் அதில் தம்மை இணைத்துக்கொள்ள காரனமாயிருந்தவர். அழகு என்ற பெயரில் எழுதுவது எங்களால் மறியாதைக்குறியவராக கருதப்படும் அந்த "அதிரை ஜமீல் காக்கா" இல்லை என்ற நம்பிக்கை இன்றும் எமக்குள்ளது. அந்த நம்பிக்கையை அல்லாஹ் பொய்ப்பிக்காதிருப்பானாக. (சமுதாய நலன் கருதியும் ஜமீல் காக்காவின் மறியாதை கருதியும் நாம் ஜமீல் காக்கா சம்மந்தப்பட்ட இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுகின்றோம்)

மிகத் திட்டமிட்டு "அழகு" என்ற பெயரில் எழுதியவரின் நாகரிகமான ஒரு மறுமொழியை மட்டும் இங்கு இட்டு மக்களின் கவணத்தை திசை திருப்ப முயன்றுள்ளார் இந்த இஸ்லாம் கல்வி.காம் இணைய உரிமையாளர் அபு முஹம்மத் என்ற முஃப்தி. இதே அழகு எம்மை நாகரீகமற்ற வார்த்தைகளால் எழுதி எனக்கு முகவை பாசை சிறிது தான் தெறியும் எங்க ஊர் பாசையில் ங்கொக்கா...அது ...இது என்று மோஷமாக எழுதியிருந்தார் அதை ஏன் இஸ்லாம் கல்வி.காம் இணைய உரிமையாளர் அபு முஹம்மத் என்ற முஃப்தி தனது பதிவில் மறைத்துள்ளார்?

(ஜூனியர்) அழகு என்ற கீழை ஜமீல் (ததஜ) என்பவரை எதிர்த்து "பிரித்து மேய்ந்துவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். என்று இஸ்லாம் கல்வி.காம் இணைய உரிமையாளர் அபு முஹம்மத் என்ற முஃப்தி தனது பதிவில் எழுதியுள்ளார் . நாம் எங்கு எப்போது யாரிடம், எத்தனை பேரிடம் சொல்லித் திறிந்தோம்?

ரைசுதீன் என்பவர் அவரின் மனக்குமுறலை "விடாது கருப்பு" என்ற பதிவோடு விட்டுவிடாமல் அவரின் வலைப்பதிவிலும் இணையத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் நபர்களுக்கு பதில் கொடுக்கும் சகோதரர்களை சரமாரியாக விமர்ச்சித்திருந்தார். அதில் ஒரு பத்தி மட்டும் சேம்ப்பிளுக்காக என்று நாம் இஸ்லாம்கல்வி.காம் முஃப்திக்காக எழுதிய தனிப்பட்ட ஒரு வாக்கியத்தை திரித்து விட்டு "இணையத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் நபர்களுக்கு பதில் கொடுக்கும் சகோதரர்களை சரமாரியாக விமர்ச்சித்திருந்தார்." என்று பொய்யை நாக்கூசாமல் எழுதியுள்ளார். அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த பகுதி அவருக்காக மட்டுமே (முஃப்திக்காக) தனியாக எழுதப்பட்டது என்பது அவருக்கு மிக நன்றாக தெறியும். இருந்தபோதிலும் அந்த பகுதியை திரித்து விட்டு "எல்லாத்தையும் திட்டுறான் ...ஓடியாங்க..." என்று சப்போர்ட்டுக்கு ஆள் திரட்டியுள்ளார்.

எமது எச்சரிக்கை பகுதி-3 என்ற அந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு நன்றாக தெறியும் அதில் நாம் யாரை குறிப்பிட்டு அந்த முதல் பகுதியை எழுதியுள்ளோம் என்று அது தமிழ் முஸ்லிம் மன்றம் மற்றும் இஸ்லாம்கல்வி.காம் ஓனர் அபுமுஹம்மத், அபு உமர், நாட்டாமை உள்பட பல பெயர்களில் எழுதிவரும் முஃப்தி என்பவருக்காக தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டதாகும்.

எமக்கும் இஸ்லாம் கல்வி.காம் மற்றும் தமிழ் முஸ்லிம் மன்ற உரிமையாளர் முஃப்தி அவர்களுக்கும் இருந்த நிறைய இனக்கமான தொடர்பு பற்றி அனைவரும் அறிவீர்கள். நாங்கள் இருவரும் எவ்வளவு இனக்கமாக செயல்பட்டோம் என்பதை பற்றியும் அனைவுரும் அறிவீர்கள். இடையில் எங்களுக்குள் சில சிறிய கருத்து வேறுபாடுகள். இதில் இறைவனுக்காக நாம் விட்டுக்கொடுக்க தயாராகவே இருந்தோம் இன்னும் பல விஷயங்களில் நாம் விட்டுக்கொடுக்கவும் செய்தோம் அதை எமமை ஒருங்கினைக்க முயன்ற எங்கள் இருவரையும் நன்கரிந்த சகோதரர்கள் நன்கறிவர்.

தனது விட்டுக்கொடுக்காத தனத்தாலும், தான்தான் சரியானவன், தனது கருத்துக்களுக்கு தனது என்னங்களுக்கு மாற்று இருக்கக் கூடாது என்ற ஆனவத்தாலும் அவர் எம்மை ஆக்கிரமிக்க முயன்றார். எமது எழுத்துக்களில் தனது சுய கருத்தக்களை தினிக்கவும் தனது சுய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் இஸ்லாம் கல்வி மற்றும் தமிழ் முஸ்லிம் மன்ற நிர்வாகி முஃப்தி அவர்கள் முயன்றார்கள் அதற்கு நாம் ஓத்துவராத காரனத்தால் எமக்குள் சிறிய பிளவு ஏற்ப்பட்டது அதன் விளைவே அவரால் எம்மைத்தாக்கி எழுதப்பட்ட அந்தக் கட்டுரை. தமிழ் முஸ்லிம் மன்றத்தின் விதிகளில் முக்கியமானது


"அரசியல், இயக்கம் தவிர மற்ற எந்த ஒரு விஷயத்திற்கும் தனி நபரை விமர்ச்சிப்பதை நிர்வாகம் தடை செய்கிறது. அப்படி இனி பதியப்பட்டால் அவை நீக்கப்படும் என்பதையும், தொடர்ந்து செய்தால் உறுப்பினர் வசதி துண்டிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் யாரும் விதிவிலக்கல்ல"



இதில் எந்த விதத்தில் அபுமுஹம்மத் என்ற முஃப்தி விதிவிலக்கானார்? இது போன்ற சில விஷயங்களுக்காக தமிழ் முஸ்லிம் மன்றத்தில் இருந்து சிலரை நீக்கி இந்த அபுஉமர் மற்றும் அபு முஹம்மத், என்ற முஃப்தி ஆடிய நாடகம் அனைவரும் அறிந்ததே!! இப்போது அவருக்காக விதி விலக்கா?

ஆக இந்த அபுமுஹம்மத் என்ற முஃப்தி என்பவர் தனது "பிரித்து மேய்வதும் பின்னி பெடலெடுப்பதும்" கட்டுரையில் ரைசுதீன் என்ற நபர் எழுதிய சம்பந்தப்பட்ட 3 பதிவுகளில் இருந்து குறிப்பிடத்தக்க சில விஷயங்கள் என்று சிலவற்றை பி.ஜே யானிகள் செய்வதுபோல் உருட்டி, திரட்டி, சேர்த்து, திரித்து வெளியுட்டுள்ளார். அவருக்கு நம் பதில்:

ரைசுதீனால் எழுதப்பட்ட 3 பதிவுகளுமே முஃப்தி என்ற தனிப்பட்ட நபரின் ஆனவத்திற்கும் தான் என்ற மமதையில் திறியும் போக்கிற்கும் கொடுக்கப்பட்ட பதிலாகும் அது இந்த முஃப்தி என்ற நபரால் திரித்து விடப்படுவதுபோல் இனையத்தில் எழுதும் அனைத்து இஸ்லாமிய எழுத்தாழர்களுக்கும் எதிராக எழுதப்பட்டதல்ல. அதுபோல் இனையத்தில் எழுதும் இஸ்லாமிய எழுத்தாலர்கள் அனைவரும் இதை மிக்க அறிந்த நிலையிலேயே உள்ளார்கள். முஃப்தி என்ற நபரின் இந்த கோயாபல்ஸ் தனத்தையும் அறிந்திருப்பார்கள்.



நமது உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பெண் பித்தராகவும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை கேவலமாகவும் வாள் முனையில் இஸ்லாம் பரவியது என்றும் சித்திரிக்க பலர் இணையத்தில் தலையெடுத்த போதுதான் அதற்கு பதில் கொடுப்பதற்காக பலர் உருவானார்கள். தமிழோவியம் என்ற இணைய பத்திரிக்கையில் நபியவர்களை வலிப்பு நோய் உள்ளவராகச் சித்தரித்து ஒருவர் தொடர்எழுதிய போது அதே தளத்தில் அதற்குப் பதில் தொடரை எழுதிய சகோதரர் போன்றோரை நோக்கிதான் பொத்தாம் பொதுவாக இவ்வாறு புழுதி வாரித் தூற்றுகிறார்.-முஃப்தி


என்று எழுதி மக்களின் உணர்ச்சிகளை தூன்டி தன்னை நோக்கி தனக்காக எழுதப்பட்ட ஒரு விஷயத்தை மேலே உள்ளது போல் எழுதி என்னமோ ரைசுதீன் எனபவர் நமது உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தவறாக எழுதிவிட்டதுபோலும் ரைசுதீன் என்பவன் இஸ்லர்த்திற்கும் முஸ்லிம்களுக்கும் இணைய இஸ்லாமிய எழுத்தாளர்களுக்கும் எதிரி என்பது போலவும் ஒரு கற்பனை படத்தை உண்டாக்க முயற்ச்சித்திருக்கிறார். அவரின் இந்த முயற்சி அல்லாஹ் நாடினால் பொய்ப்படுத்தப்படும். மற்றுமுள்ள சகோதரர்கள் அதை தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.


தமிழ்முஸ்லிம்களின் அரசியல் மேடை என்ற கூட்டு வலைப்பதிவில் இடம்பெற்ற இவர் எழுதிய நாகரீகமற்ற எழுத்துக்களை உள்ளடக்கிய 'எச்சரிக்கை' என்ற தொடரை ரமளான் மாதத்தில் கண்ணுற்ற சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதன் பிரதிபலிப்பாக எங்கே என்ன பேசுகிறோம் என்று கூட விளங்காமல் இஸ்லாத்தின் கொள்கைகளை கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட பதிவில் போய் இவரின் மனக்குமுறல்களுக்கு மருந்து தேடியது கருப்பு என்ற
நபரின் இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனத்தை ஆமோதிப்பது போல் உள்ளது.-முஃப்தி



என்பதாக அபு முஹம்மத் என்ற இஸ்லாம் கல்வி.காம் ஓனர் முஃப்தி எழுதியுள்ளார், இவருக்கு சில கேள்விகள் :

1. நான் எச்சரிக்கை என்ற பெயரில் எழுதப்போகின்றேன் என்பது உங்களுக்கு தெறியாதா?

2. அப்துல் ரஹ்மான் பிர்தெளசி போன்ற ததஜ வினரின் செக்ஸ் ஊளல்களை எழுதச்சொல்லி ஊக்கம் கொடுத்தது நீங்கள்தானே?

3.எச்சரிக்கை-2 ஐ படித்துவிட்டு அப்துல் ரஹ்மான் பிர்தெளசியை பற்றி இன்னும் எழுதுங்கள் என்று தொலைபேசியில் அழைத்து நீங்கள் என்னிடம் கூறவில்லையா?

4.எமது எழுத்துக்கள் நாகரிகமற்றவை என்றும் ரமழான் மாதத்தில் எழுதக்கூடாது என்றும் உங்களுக்கு முன்னாடியே தெறியாதா? என்னை இதுபோல் தலைப்புக்களில் எழுத ஊக்கமூட்டியது யார்? கட்டுரை நன்றாக உள்ளது அப்துல் ரஹ்மான் பிர்தெளசியை இன்னும் பிரித்து மேயுங்கள் என்று போன் செய்து என்னிடம் நீங்கள் கூறியது ரமழான் மாதத்திலா இல்லை அக்டோபர் மாதத்திலா? நான் எழுதினால் ரமழான் மாதம் நீங்கள் எழுதினால் அக்டோபர் மாதமா?


இன்னும் கேள்விகள் கேட்கலாம் நேரமின்மை மற்றும் இதுபோன்ற ஒரு ஆனவம் தலைக்கேறிவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கிறோமே என்ற வெறுப்பின் காரனமாக இத்துடன் நிறுத்துகின்றேன்.

நான் என்ற உங்களின் ஆதிக்கத்தை என்மீது செலுத்த இயலவில்லை என்பதாலும் இன்னும் சில தனிப்பட்ட விரோதத்தாலும் நமக்குள் உள்ள பிரச்சினையையும் மற்றும் பலருக்கு போன் செய்து எம்மை தோற்கடிக்க முயன்று நீங்கள் தோற்றுப்போனதால் ஏற்ப்பட்ட மனச்சேர்வையும் வெறுப்பையும் எழுத்துக்களில் கொட்டியுள்ளீர்கள். மக்கள் நீங்க்ள நினைப்பது போல் இல்லை சகோதரா...மிக தெளிவாக உள்ளார்கள். நீங்கள் தான் ஒரு சிறிய வட்டத்திற்குள் உங்களை அடைத்துக்கொண்டு மன உளைச்சலில் உளன்று கொண்டுள்ளீர்கள். உங்களின் இந்த எத்தர் போக்கு எங்கும் எடுபடாது நீங்கள் இன்னும் நிறைய நேரம் எடுத்து இன்னும் கவனமாக தந்திரமாக வார்த்தைகளை திசை திருப்பி விட முயன்றாலும் இறைவன் என்ன நாடியுள்ளானோ அதுதான் நடக்கும்.

கருப்பு என்ற எனது திரவிட சகோதரனின் (கருப்பு, ஆப்பு, போலி டோன்டு போன்றோர் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று நேரடியாக கூறத்தயாரா? திராவிடர்களை சகோதரர்கள் என்றழைக்க கூடாது என்று கூறத்தயாரா?) இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனத்தை நான் ஒருபோதும் ஆமோதிக்கவில்லை மாறாக அதை எதிர்க்கவே செய்தோம் அறியமையில் எழுதிய அவருக்கு இஸ்லாம் தவறானதல்ல தயவு செய்து இஸ்லாத்தை பற்றியோ எமது உயிரினும் மேலான நபிகளை பற்றியோ தவறாக எழுதவேண்டாம் மற்ற மதங்களில் உள்ளதுபோல் போலிகள் முஸ்லிம்களிடையேயும் உண்டு அவர்களைத்தான் நான் அடையாளப்படுத்திக் கொண்டள்ளேன் என்றே எழுதியுள்ளேன். அதை படிப்பவர்கள் சரியாக புரிவார்கள் நீர் என்னதான் திரித்தாலும் ஒன்றும் நடக்காது இன்சா அல்லாஹ்.

இவர் இப்படித்தான் எழுத வேண்டும், இன்னதான் எழுதவேண்டும் இந்த முறைப்படிதான் எழுத வேண்டும் என்பதை தீர்மானிக்க நீங்கள் யார் முஃப்தி சார்? எழுத்தச்சனா? இல்லை ஏதாவது பிரபல எழுத்தாலரா? எங்கேயாவது நாலு யாரும் படிக்காத வலைபபதிவில் போய் இஸ்லாத்தை பற்றி தப்பா எழுதுற நாலுபேத்தக்கு பதில் கொடுத்ததாலோ அல்லது 5 வீடியோவை இலவசமாக நன்கொடை மூலம் கிடைக்கப்பெற்ற இனையத்தில் அப்லோட் செய்றதுனால நீங்க பெறிய எழுத்தாளர் ஆயிட்டீங்களா முஃப்தி சார்? இஸ்லாமிக் சென்டரையெல்லாம் இழுத்து எழுதியிருக்கீங்க அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேனும் சார்.

நீங்கள் இஸ்லாம் கல்வி.காமில் எத்தனை கட்டுறை எழுதியுள்ளீர்கள் அதில் உங்கள் சொந்த படைப்புக்கள் எத்தனை? ஏற்கனவே உங்களின் தான் என்ற அகம்பாவம் இணையத்தில் இஸ்லாமிய இணையத்தளங்கள் நடத்தும் பல சகோதராக்ளுடன் தோல்வியடைந்ததால் தான் நீங்கள் இஸ்லாம்கல்வி.காம் ஆரம்பித்தீர்கள். ஏற்கனவே உள்ள பல இஸ்லாமிய தளங்களின் கட்டுரைகளையும் அதன் ஆக்கங்களையும் மற்றும் வெப்லிங் போன்ற மற்றவர்களின் ஆக்கங்களை வைத்து சி.டி வெளியிட்டு நீங்கள் பெரிய எழுத்தாளர் போலவும் சமுதாயத்திற்காக தியாகங்கள் செய்தது போலவும் பிலிம் காட்டி பெயர் சம்பாதித்ததை எல்லோரும் அறிவர்.உண்மையாளர் போலும் மார்க்க அறிஞர் போலும் வேஷமிடும் நீங்கள் யார்? மற்றவர்களின் காரியங்களை மதிப்பிட்டு அவன் பொய்யன் இவன் உண்மையாளன் என்று சர்ட்டிபிகேட் வழங்கக் கூடிய தகுதியை உங்களுக்கு வழங்கியது யார்? நீங்கள் எந்த வகையில் உண்மையாளன்? அபூ முஹை போன்றோரை நாடகமாடி பொய்யனாக்கினீர்களே! அதையெல்லாம் நாம் அறியாமல் இல்லை. உம்மைபோல் எங்களுக்கும் தொழில்நுட்பம் தெறியும்.


இந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது அனைத்தும் இஸ்லாம் கல்வி.காம் ஓனரும் அபுமுஹம்மத், அபுஉமர், நாட்டாமை, மற்றும் பல பெயர்களில் எழுதி வருபவருமான முஃப்தியாகிய உங்களுக்கு நேரடியாக எழுதப்பட்டவையாகும் இதையும் திரித்து "எல்லோரும் ஓடியாங்க...ரைசுதீன் இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் சகோதரர்களை நோக்கிதான் பொத்தாம் பொதுவாக இவ்வாறு புழுதி வாரித் தூற்றுகிறார்" என்று கூவுவீர்கள் என்று எதிர் பார்க்கிறோம்.



நீங்கள் இவ்வளவு சிறுமையாக போவீர்கள் என்று நாம் எதிர் பார்க்கவில்லை முஃப்தி சார்!! நீங்கள் யார் யாருக்கெல்லாம் போன் செய்து ரைசுதீன் கெட்டவன் அவன் பொய்யன் அவனது கட்டுரைகளுக்கு மறுமொழி இடாதீர்கள் என்றும் அவனது கட்டுரைகளை மெயிலில் பார்வாட் செய்யாதீர்கள் என்றும் அதை மறுபதிவு செய்யாதீர்கள் என்றும் அவனது சைட்டுக்கு லிங் கொடுக்காதீர்கள் என்றும் (உங்கள் பதிவில் லிங் உள்ளது அது எதற்கென்று எமக்கு தெறியும்)சொன்னீர்கள் என்பதை நாம் இங்கு வெளியிடவா? அத்துடன் நின்றீர்களா? என்னை தமிழ் தஃவா கமிட்டியில் சேர்க்காதீர்கள் என்றும் யாருக்காவது போன் செய்து ரைசுதீனை பற்றி சொல்லவா? யாரிடம் சொன்னால் அவனை தமிழ் தாவா கமிட்டியில் இருந்து நீக்குவார்கள் என்றும் சிறுமைத்தனமாக நீங்கள் செய்து உங்கள் பெயரையே நீங்கள் பாழடித்து கொண்டீர்களே அவற்றை பற்றி விரிவாக பேசலாமா?



நாம் இருவரும் சந்தித்துமில்லை, நேரில் பேசியதுமில்லை எல்லாம் தொலைபேசி வாயிலாகத்தான்..உங்களின் ஆனவமும் மமதையும் மற்றவர் விஷயங்களில் மூக்கை நுலைக்கும் தன்மைக்கும் நாம் இடமளிக்காததால் ஏற்ப்பட்ட ஒரு சிறிய பிரச்சினையை ஒரு சமுதாய பிரச்சினைபோல் ஊதி பெரிதாக்கியமையை நடுநிலையாளர்கள் (உம்மை போன்றவர்க்ளல்ல) கவணித்து கொண்டுள்ளார்கள். நீசத்தனமான காரியங்களை செய்து கொண்டு பெரியமனிதன் வேடமிடுவதை நிறுத்தங்கள். நீங்கள் எங்களுக்கு நன்மையை நாடினால் நேரடியாக எம்மிடம் தெறிவிக்கலாமே அதை விடுத்து என்னிடம் தொலைபேசி மூலமாகவோ அல்லது மெசென்சர் மூலமாகவோ தொடாபு கொள்ளக்கூடாது என்று ஆனவமாக கூறியது யார்? சக சகோதரனுடன் பேசாமல் இருக்கக்கூடாது என்று உங்களுக்கு எத்தனை முறை போன்செய்தோம் அதை கட்செய்து விட்டது யார்? நானா மார்க்க அறிஞர் என்று பீத்தும் நீங்களா?

தயவு செய்து வட்டத்திலிரந்து வெளியே வாருங்கள் ...உங்களைப்பற்றி மிகைப்படுத்தப்பட்ட சுய கற்பனைகளை களையுங்கள், முஜிபுர்ரஹ்மான் உமரியின் நன்பன், டாக்டர் நுஃபார் பாருக் அவாக்ளின் மானவன் என்ற மமதையிலிருந்து வெளிவாருங்கள் . இப்படீயெல்லாம் இருந்தால் நாங்கள் உங்களையும் மார்க்க அறிஞராக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு தரும் மறியாதையை தரவேண்டுமா என்ன? சுயமாக எழுதி உங்கள் இஸ்லாம் கல்வி.காமை இன்னும் நன்றாக ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் நிறைந்ததாக மாற்றுங்கள். தமிழ் இஸ்லாத்தை போல் ஒரு நூலகமாக மாற்றுங்கள். தமிழ் இஸ்லாம் கட்டுரைகளையும் ஜீபைலில் இருந்தும் தம்மாமில் இருந்தும் சில சகோதரர்கள் மர்ர்க்க நன்மை கருதி பரிசுத்த என்னங்களுடன் தரும் விடீயோக்களை நன்கொடையால் இயங்கும் சைட்டுகளில் இட்டு வெறும் பெயருக்காகவும் புகழுக்காகவும் முஃப்தி என்ற உங்கள் பெயர் எங்கும் பேசப்படவேண்டும் என்பதற்காகவும் செயல்படாதீர்கள். சுயமாக ஏதாவது செய்து புகழ் சம்பாதிக்க நிணையு்ஙகள்.

பெரிய டுபுக்கு மாதிரி கட்டப்பஞ்சாயத்து பன்னுறது அடுத்தவனை விமர்சிப்பது மற்றவாக்ளின் எழுத்துக்களை விமர்சிப்பது இணையத்தில் ரூல்ஸ் எழுத முயற்ச்சிப்பது போன்ற வேலைகளை விட்டுவிட்டு ஊர்ல உள்ளவனுக்கெல்லாம் போன் செய்து அடுத்தவனை பற்றி போட்டுக்கொடுத்து புறம் பேசி "அழகு" சொன்னதுபோல் நரமாமிசம் தின்பது போன்றவற்றை நிறுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட முயற்சியுங்கள் முஃப்தி சார்!! உங்களை நிறையவே மதித்து வைத்தள்ளார்கள் ஊரில் உள்ளவர்கள் மீதம் உள்ளதையும் நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். மற்றவர்களின் மாணமும் மறியாதையும் உங்கள் கையில் இல்லை அது அல்லாஹ்வின் கையில் உள்ளது.

இறுதியாக மமதையில் உளலும் முஃப்திக்கு நாம் கூறுவதெல்லாம் :


புறம் பேசுபவனை - அவன் எவரைப்பற்றி புறம் பேசினானோ அவர் மன்னிக்காத வரை
இறைவனும் மன்னிப்பதில்லை. (பைஹகி)



என்ற ஹதீசை நினைவு படுத்தவதோடு, உங்களை பற்றி நாம் இதுவரை யாரிடமும் புறம் பேசவில்லை நீங்கள் செய்ததுபோல் போன் போட்டு போட்டுக்கொடுக்கவில்லை நீங்கள் என்னை பொய்யன் என்று அவதூறு பரப்பியுள்ளீர்கள் நிங்கள் எம்மை எந்த விஷயத்தில் பொய்யன் என்றீர்களோ அந்த விஷயத்தில் நாம் எம்மை உண்மைப்படுத்தியுள்ளோம் அதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் நீங்கள் மீன்டும் எம்மைப் பற்றி பொய்யான தகவல்களை எழுதியும் தொலைபேசி மூலம் ஊரில் உள்ளவாக்ளுக்கெல்லாம் மிஸ் கால் அடித்தும் பரப்பி வருகின்றீர்கள். மேலே உள்ள ஹதீசை படித்து கொள்ளுங்கள்.

உங்கள் நன்பர் முஜிபுர்ரஹ்மான் உமரியோ அல்லது நீங்கள் சொல்வீர்களே உங்கள் குரு டாக்டர். நுஃபர் பாருக்கோ உங்களுக்கு நீங்கள் செய்யும் அவதூறுகளுக்கு இறுதியில் உங்கள் மன்டையில் கை வைத்து பாவ மன்னிப்பு வழங்குவார்கள் என்று எதிர் பார்த்தீர்கள் என்றால் அது நடக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இஸ்லர்தை பற்றி நன்றாக தெறியும். பி.ஜேயானிகள் செய்வது போல் நீங்கள் தான் அவர்கள் மேல் தக்லீத் செய்து உங்கள் சுய புகழுக்காக அவர்களின் பெயரை உபோயோகப்படுத்தி வருகினறீர்கள். அல்லாஹ்விடம் மண்ணிப்பு தேடிக்கொள்ளுங்கள்.

இந்த பதிவில் பிரித்து மடடும்தான் மேயப்பட்டுள்ளது. முஃப்தி என்பவர் தனது தமிழ் முஸ்லிம் மன்றத்தில் அபூ முஹை போன்ற சகோதரர்களை நாடகமாடி எப்படி அபூ முஹை போன்றோர் பொய்யன் என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார் என்றும் இஸ்லாம் கல்வி ஓனரான அபுமுஹம்மத் என்ற முஃப்தி எதை அநாகரிகம் என்று விமர்சித்தாரோ அதே கருப்புவின் வலைத்தளத்தில் அதே பதிவில் பல பெயர்களில் எம்மையும் எமது குடும்பத்தையும் அநாகரிகமான வார்த்தைகளில் தாக்கி தனது குரூரமான மற்றொரு முகத்தை போலி பெயர்களில் வெளிக்காட்டினார் என்பது ஐ.பி விபரங்களுடன் வெளியிடப்படும். அத்துடன் இன்னும் இந்த முஃப்தி எதை குற்றமாகும் என்று எழுதினாரோ அதையே தனது முகத்தை மறைத்து இவர் செய்துள்ள விபரங்களும் இன்னும் நீங்கள் எதிர்பாராதவைகளும் எமது அடுத்த பதிவான "பின்னி பெடலெடுப்பது" என்பதில் பின்னி பெடலெடுக்கப்படும்.



நன்றி
முகவைத்தமிழன்


தமிழ் மனம்

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி இலங்கை
tamil, islam, islamic, muslim, quran, muhammad, elibrary, poem, religion, minnanu noolaham, lessons, classes, magazine,தமிழ் முஸ்லிம்,தமிழ் இஸ்லாம், மன்றம்

0 Comments: